என் முதல் கவிதை?
என் தேடலின் முதல் முயற்சி தான் இந்த கவிதை?
கவிதை என்றவுடன் என் மனதில் பல எண்ணங்கள் சிறகடித்து பறந்தன.
இறுதியாக நான் இன்றுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தேன்.
எதுவுமே தெரியவில்லை! என் தாயைத்தவிர
என் வாழ்வின் முழு அர்த்தமாகிய என் அன்னையை பற்றிய என் முதல் கவிதை இதோ.
தாயன்பு
எனை ஈன்ற என் தாயே
பாலூட்டி,சீராட்டி,உனதன்பினில்
எனைநனைத்து,அரவனைத்து;
என்வுளம் மகிழ எனதாசை
நிறைவேற்றி; அறுசீர் உணவுடன்
பாசத்தையும்,பண்பையும் ஊட்டினாயே;
அறிவையும்,இறைபக்தியையும்
எனக்கிரு கண்களாக்கினாயே,அம்மா!
இன்றோ நீயென் தாய்நாட்டில்
நானோ வெளிநாட்டில்
நினைத்தவிடம் செல்ல விரைவுந்து,
செல்லிடத் தொலைபேசி,
கவின்மிகு புத்தாடைகள்,
சுவைமிகு அந்நிய உனவுகள்,
இருகை பொங்க காசுகள்;
அனைத்துமிருந்தும் நீயின்றி
என்னில் நானில்லை
உனதன்புக்கு நிகர் வேறில்லை!
-அழகை மைந்தன்
Labels: கவிதை


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home