Monday, July 21, 2008

வேண்டல்…

விழிகள் மூடின
கனவுகள் தோன்றின
தாய் மடியில் தலைவைத்தேன்
தந்தை தோள் சாய்ந்தேன்
தமக்கை கரம் பற்றி நடந்தேன்
பாட்டியிடம் கதை கேட்டேன்

விழிகள் திறந்தன
நனவுகள் புரிந்தன
உன்னிடம் வேண்டினேன்
இறைவா!
அடுத்த ஜென்மத்திலாவது
இந்தக் கனவுகள்
நிறைவேறுமா?
-அழகை மைந்தன்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home